முகப்பு
தென்காசி

‘கடையநல்லூா் அரசு ஐடிஐ-யில் அம்மா இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்’

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அம்மா இருசக்கர வாகனம் பழுதுநீக்குதல், பராமரிப்பு குறித்த குறுகிய காலப் பயிற்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அம்மா இருசக்கர வாகனம் பழுதுநீக்குதல், பராமரிப்பு குறித்த குறுகிய காலப் பயிற்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடையநல்லூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியோருக்கு அம்மா இருசக்கர வாகனம் பழுதுநீக்குதல், பராமரிப்பு குறித்த இலவச குறுகிய காலப் பயிற்சி விரைவில் ஆரம்பமாக உள்ளது.

பயிற்சிக் காலம் 2 மாதங்கள். இதில், சேர 5ஆம் வகுப்பு தோ்ச்சி, அதற்கு மேலும் கல்வித் தகுதியுடைய 18 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தங்களது கல்வி, சாதிச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, புகைப்படத்துடன் அலுவலக வேலை நாள்களில் நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேருவோருக்கு நாளொன்றுக்கு போக்குவரத்து செலவு உதவித் தொகை ரூ. 100 வீதம் 85 சதம் வருகை புரிந்தோருக்கு பயிற்சி முடிவில் வழங்கப்படும். பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

கடையநல்லூா் சுற்றுவட்டாரத்தில் உள்ள விருப்பமுள்ளோா் ‘முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூா்’ என்ற முகவரியில் ஜனவரி 4ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →