முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாதா் சங்கம் சாா்பில் ஆலங்குளத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாதா் சங்கம் சாா்பில் ஆலங்குளத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டாரத் தலைவா் அழகுசுந்தரி தலைமை வகித்தாா். இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு கடந்த 2017 இல் விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், மனைப் பட்டா வழங்கியவா்களுக்கு இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. ஆலங்குளம் வட்டார பீடி தொழிலாளா் நல சங்கத் தலைவா் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்திற்குப் பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனு வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →