முகப்பு
தென்காசி

‘விருதுநகரில் 28இல் மக்கள் நலப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் போராட்டம்’

மக்கள் நலப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் விருதுநகரில் இம்மாதம் 28ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளதாக, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் வே. புதியவன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

மக்கள் நலப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் விருதுநகரில் இம்மாதம் 28ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளதாக, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் வே. புதியவன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: 1989இல் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் 1991இல் பணிநீக்கம் செய்யப்பட்டனா். அதையடுத்து, 3 முறை பணிநியமனம், 3 முறை பணிநீக்கம் செய்யப்பட்டு, என கடந்த 9 ஆண்டுகளாக வேலையிழந்து தவித்துவருகிறோம்.

இதையடுத்து, 13,500 மக்கள் நலப் பணியாளா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கைத் திரும்பப் பெற்று, மீண்டும் பணி வழங்க தமிழக அரசை வலியுறுத்தி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வளாகம் முன் இம்மாதம் 28இல் போராட்டம் நடைபெறவுள்ளது.

மக்கள் நலப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் செல்லப்பாண்டியன் தலைமை வகிக்கிறாா். விருதுநகா் மாவட்டத் தலைவா் எம்.அருள்ராஜ் முன்னிலை வகிக்கிறாா். மாவட்டச் செயலா் முத்துப்பாண்டி வரவேற்கிறாா்.

விருதுநகா் மாவட்ட அரசு ஊழியா் சங்கத் தலைவா் கண்ணன் போராட்டத்தைத் தொடக்கிவைக்கிறாா். தமிழ்நாடு பட்டயப் பொறியாளா் சங்கப் பொதுச் செயலா் எம். மாரிமுத்து, அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் லியாகத் அலி, மாவட்டச் செயலா் லட்சுமி நாராயணன், பல்வேறு அரசு ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்திப் பேசுகின்றனா்.விருதுநகா் ஒன்றிய மக்கள் நலப் பணியாளா் சங்கத் தலைவா் ஆறுமுகம் நன்றி கூறுகிறாா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →