திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு!
திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர் வைக்கப்பட்டிருப்பது பற்றி...
திருச்சி ரயில்வே மேலாளர் அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது
“கர்தவ்ய த்வார்” என்றால் கடமையின் நுழைவு வாயில் எனப் பொருள்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ரயில்வேவின் நடவடிக்கையை குறிப்பிட்டு, உடனடியாக தமிழில் பெயரை மாற்ற வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்வுக்கு தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பட்டிருப்பதாவது:
“தமிழ் மொழிபெயர்ப்பு பெயர்ப் பலகையை முறையாக வைக்க தெற்கு ரயில்வேவுக்கு உடனடியாக அறிவுறுத்துங்கள். ஏனெனில், சில அதிகாரிகள் செய்த தவறுகளால், தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஹிந்திப் பெயர் வைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்சிஸ்ட் கம்யூனிச்ட் எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Hindi name for Trichy Railway Office! Tamilisai Soundararajan opposes!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.