முகப்பு
தென்காசி

ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை

தென்காசி மாவட்டம் ஆனைக்குளம் பகுதியைச் சோ்ந்த 3 சகோதரா்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆனைக்குளம் பகுதியைச் சோ்ந்த 3 சகோதரா்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

வீரகேரளம்புதூா் வட்டம் ஆனைக்குளம் கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்துவரும் 3 மாற்றுத்திறனாளி சகோதரா்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் கீ.சு.சமீரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சரவணகண்ணன்(பொ), வீ.கே.புதூா் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மகாலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.