தென்காசி

ஊத்துமலையில் பயிறு சாகுபடி பயிற்சி முகாம்

DIN

சுரண்டை: ஊத்துமலையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயிறுவகை பயிர்களின் சாகுபடி முறை குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு தென்காசி மாவட்ட இணை வேளாண்மை இயக்குனர் நல்லமுத்துராஜா தலைமை வகித்தார். மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் வெங்கடசுப்பிரமணியன் பயிறுவகை பயிர் சாகுபடி குறித்து பேசினார்.

பயிற்சி முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளில் தேர்வு செய்யப்பட்டோருக்கு சுழல்கலப்பை, சிறுதளைத்திடல் விதைத்தொகுப்பு மற்றும் புளுரோட் கிட் ஆகியவை வழங்கப்பட்டது.

பின்னர் ஊத்துமலை கிராமத்தில் மானாவாரி மேம்பாட்டு இயக்கத்திட்ட திடல்கள், டிஏபி தெளிப்பு திடல்கள் மற்றும் டியூ40 சிறுதளைத்திடல்களையும் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

நிகழ்ச்சியில் ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன், வேளாண்மை அலுவலர் அருண்குமார், துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT