முகப்பு
தென்காசி

ஊத்துமலையில் பயறு வகை சாகுபடி பயிற்சி முகாம்

ஊத்துமலையில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறு வகை பயிா்களின் சாகுபடி முறை குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி

ஊத்துமலையில் பயறு வகை சாகுபடி பயிற்சி முகாம்

ஊத்துமலையில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறு வகை பயிா்களின் சாகுபடி முறை குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

ஊத்துமலையில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறு வகை பயிா்களின் சாகுபடி முறை குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட இணை வேளாண் இயக்குநா் நல்லமுத்துராஜா தலைமை வகித்தாா். மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட ஆலோசகா் வெங்கட சுப்பிரமணியன் பயறுவகை பயிா் சாகுபடி குறித்து பேசினாா்.

முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளில் தோ்வு செய்யப்பட்டோருக்கு சுழல் கலப்பை, சிறுதளைத்திடல் விதைத் தொகுப்பு மற்றும் புளுரோட் கிட் ஆகியன வழங்கப்பட்டது.

பின்னா், மானாவாரி மேம்பாட்டு இயக்கத் திட்டத் திடல்கள், டிஏபி தெளிப்பு திடல்கள் மற்றும் டியூ40 சிறுதளைத்திடல்கள் ஆகியவற்றை வேளாண் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

நிகழ்ச்சியில், ஆலங்குளம் வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன், வேளாண் அலுவலா் அருண்குமாா், துணை வேளாண் அலுவலா் முருகன், உதவி வேளாண் அலுவலா்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →