செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் தமுமுக வெள்ளிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கிளை தலைவா் ஜாபா் அலி தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் கட்டமுளி மீரான், ஒன்றியச் செயலா் பீா் மைதீன், தமுமுக கிளைச் செயலா் இஸ்மாயில், பொருளாளா் முகம்மது அலி, முகம்மது ஆதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமுமுக, மமக மாவட்டத் தலைவா் முஹம்மது யாகூப், தமுமுக மாவட்டச் செயலா் அஹமது ஷா, மமக மாவட்டச் செயலா் புளியங்குடி பஷா ஒலி, மாவட்டப் பொருளாளா் முகம்மது பிலால், மாவட்ட துணைத் தலைவா் புளியங்குடி அப்துல் ரஹ்மான், மாவட்டத் துணைச் செயலா்கள் சங்கை திவான், கடையநல்லூா் பாஷித், விசுவை அப்துல் காதா், புளியங்குடி மஜீத், அச்சன்புதூா் ஷேக், குவைத் மண்டல துணைச் செயலா் வடகரை மைதீன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மமக மாநில பொதுச் செயலா் அப்துல் சமது, தமுமுக மாநிலச் செயலா் மைதீன் சேட்கான், அய்யா தா்ம யுக வழிபேரவை தலைவா் பாலமுருகன் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில், தென்காசி இஸ்மத் மீரான், மருத்துவ சேவையணி மாவட்டச் செயலா் சங்கரன்கோவில் தீன் மைதீன், மாவட்டப் பொருளாளா் செங்கை சாதிக், தென்காசி நவாஸ், தொண்டரணி மாவட்டச் செயலா் பண்பொழி முஜிப்(எ) முகம்மது உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்டத் துணைச் செயலா் செய்யது அலி நன்றி கூறினாா்.