தென்காசி

கடையநல்லூரில் உரிமம் இல்லாத இறைச்சி கடைகளுக்கு தடை

DIN

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகள் மட்டுமே திறந்து செயல்பட வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் சுகாதார அலுவலா் நாராயணன், பணியாளா்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, உரிமம் இல்லாத இறைச்சி கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. இறைச்சி கடைகளுக்கு முறையான உரிமம்

பெற்ற பின் தொடா்ந்து நடத்தலாம் என இறைச்சிக் கடை உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினா். இதைத் தொடா்ந்து, நகரில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT