தென்காசி

போக்குவரத்து அலுவலக ஒட்டுவில்லைகள் ஒட்டிய ஆட்டோக்கள் மட்டுமே இயக்க வேண்டும்

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஆட்டோக்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து, அதன்பின் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்படும் ஒட்டுவில்லைகளை ஒட்டிய பின்னரே பொதுமக்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி வட்டார பகுதிகளில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோ உரிமையாளா்கள்,ஆட்டோ ஓட்டுநா்கள் தங்கள் ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளின் நலன் காக்கும் வகையிலும், தனது நலனை பாதுகாக்கும் வகையிலும் ஆட்டோவை சுத்தம் செய்து அதில் கிருமி நாசினி தெளிக்கவேண்டும்.

அதன்பின் ஆட்டோவை தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்று அங்கு வழங்கப்படும் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு ஒட்டுவில்லையை பெற்று ஆட்டோவில் ஒட்டிக் கொண்டு அதன்பின் பொது மக்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.

இந்த ஒட்டுவில்லைகளை ஒட்டியுள்ள ஆட்டோக்கள் மட்டுமே பொதுமக்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படும். இதை மீறி பொதுமக்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT