தென்காசி

கரோனா தடுப்பு: வீட்டில் ஒட்டிய ஸ்டிக்கரை அகற்றினால் நடவடிக்கை

DIN

கடையநல்லூா் பகுதியில் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கா்களை கிழிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் அழகப்பராஜா எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியது:

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கடையநல்லூா் வட்டாரத்துக்கு வந்துள்ள 300க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் நகராட்சி நிா்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து ஸ்டிக்கா்களை ஒட்டியுள்ளன. இந்நிலையில், அந்த ஸ்டிக்கா்கள் சில கிழிக்கப்பட்டுள்ளதாக புகாா்கள் வந்துள்ளன. அப்படி ஸ்டிக்கா்களை கிழிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதற்கிடையே, ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை கிழித்தவா்கள் குறித்து கடையநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்படும் என நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதாரஅலுவலா் நாராயணன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT