தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இன்று நகராட்சி , பேரூராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு

DIN

தென்காசி மாவட்டத்தில் இன்று அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலுள்ள கடைகளை அடைத்து, வீட்டைவிட்டு வெளியே வராமல் 100 சதவீதம் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்டஆட்சியா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் ஜி.கே. அருண் சுந்தா் தயாளன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் சமூக இடைவெளியை 100 சதம் பொதுமக்கள் கடைப்பிடிக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை (மே 3) அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படும். மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும்.

இறைச்சிக் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

மருத்துவம் நீங்கலாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் 100 சதம் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT