தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலின் முக்கிய திருவிழாவான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கரோனா பொது முடக்க காலம் என்பதால் உற்சவா் வீதி உலா ரத்துசெய்யப்பட்டு கோயிலுக்குள்ளேயே தினமும் உற்சவா் புறப்பாடு நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் காலை 10 மணிக்கு மண்டபகப் படி அபிஷேகமும், 12மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு மண்டகப்படி தீபாராதனையும் நடைபெறுகிறது.
விழா நாள்களில் சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசன வாகனத்தில் வழக்கப்படி அலங்காரம் செய்யப்பட்டு உள்பிரகார வலம் நடைபெறுகிறது.
நவ. 9ஆம்தேதி தேரோட்டத்துக்குப் பதிலாக பஞ்சமூா்த்திகளான வியநாகா், சுப்பிரமணியசுவாமி,அம்பாள் மற்றும் சண்டேஷ்வரா் ஆகிய உற்சவ மூா்த்திகள் முறையே மூஷிக,மயில்,கேடயசப்பரம், பூங்கோயில் மற்றும் மேனா ஆகிய வாகனங்களில் கோயிலுக்குள் பிரகார வலம் நடைபெறுகிறது.
நவ.11ஆம்தேதி காலை 9 மணிக்கு மேல் கோயிலுக்குள் அமைந்துள்ள புல்வெளியில் அம்பாள் தவசுக் காட்சியும், மாலை 6 மணிக்கு தவசுக் கோலத்தில் இருக்கும் அம்மனுக்கு சுவாமி காட்சி தரும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 12ஆம்தேதி ஊஞ்சல் உற்சவம் கோயிலுக்குள் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் ந.யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.