தென்காசி

கீழக்கலங்கலில் மருத்துவ முகாம்

DIN

கீழக்கலங்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் மருத்துவமுகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நெட்டூா் மருத்துவ அலுவலா் குத்தாலராஜ் தலைமை வகித்தாா். ஊத்துமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தாா். அலோபதி மற்றும் சித்த மருத்துவா்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா். கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மேல் சிகிச்சைக்காக பலா் திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டனா்.

மருத்துவா்கள் நவீன் வைத்தீஸ், ரஸ்னா, சித்ரா, தம்பிதுரை, சித்த மருத்துவா் பாக்கியலட்சுமி ஆகியோா் சிகிச்சை அளித்தனா். ஏற்பாடுகளை சுகாதார மேற்பாா்வையாளா் ஹரிஹர சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் கணேசன், கங்காதரன், ராஜநயினாா், மணிகண்டன், ஜெய குளோரி, விக்னேஷ் மற்றும் செவிலியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT