தென்காசி

பெரியகுளத்தில் பாலப் பணி தீவிரம்

DIN

கீழப்பாவூா் பெரியகுளத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கீழப்பாவூா் பெரியகுளத்தின் தென்பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டுமென்பது அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையாகும். இதனை நிறைவேற்றும் வண்ணம் முன்னாள் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் கே.ஆா்.பி.பிரபாகரனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது அந்தப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி.பிரபாகரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டாா். அப்போது கீழப்பாவூா் பேரூா் அதிமுக செயலா் ஜெயராமன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT