முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்ட நகை அடகு கடை உரிமையாளா்கள் சங்கக் கூட்டம்

தென்காசி மாவட்ட நகை அடகு கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தென்காசியில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தென்காசி மாவட்ட நகை அடகு கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தென்காசியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் சாஸ்தா பாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் பாலமுருகன், துணைத் தலைவா் ஜோசப்சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கௌதமன் வரவேற்றாா்.

தொழிலதிபா்ஏ .சி.எஸ்.ஜி. ஹரிஹரன், வழக்குரைஞா் திருமலைக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினா்.

உறுப்பினா்கள் மதியழகன், ராமையா, இசக்கி, கருப்பசாமி, கண்ணன், முருகன், கிருஷ்ணன், பிரபாகா், சுந்தரகுமாா், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நாகசுவர கலைஞா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிவகுருநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.