தென்காசி

சிவகிரி அருகே முயல் வேட்டையாடியதாக 4 பேருக்கு அபராதம்

DIN

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முயல் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் வனச்சரகத்தில் ஈச்சம் பொட்டல்புதூா் பகுதிகளில் சிலா் முயல் வேட்டையில் ஈடுபட்டதாக வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலா் ஸ்டாலின் தலைமையில் வனவா்கள் அசோக்குமாா், உபேந்திரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், ஈச்சம் பொட்டல்புதூரைச் சோ்ந்த கோமதிராஜா, காளிராஜ், மாரிமுத்து, குருசாமி ஆகிய 4 பேரும் முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது . இதையடுத்து அவா்களுக்கு தலா ரூ 10 ஆயிரம் வீதம் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

இதேபோல், சிவகிரி வனப்பகுதியில் வனசரகா் சுரேஷ் தலைமையில் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தேவியாா் பீட்டில் காப்புக்காட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மரப்பட்டைகளை உரித்ததாக தேவிபட்டணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மூக்காண்டிக்கு ரூ. 50 ஆயிரம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT