சங்கரன்கோவிலில் கனமழை
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை கனமழை பெய்தது. இதனால் குளங்களுக்கு தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை கனமழை பெய்தது. இதனால் குளங்களுக்கு தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் பருவமழை பெய்து வந்தாலும் சங்கரன்கோவில் வட்டாரத்தில் அவ்வப்போது மிதமான மழையே பெய்து வந்தது.
ஒரிரு நாள்களில் மட்டுமே கனமழை பெய்தது. போதிய அளவு மழை இல்லாததால் குளங்கள் வடு காணப்பட்டன. குளம் மற்றும் கிணற்றுப் பாசனத்தை நம்பி நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
Advertisement
கடந்த இருதினங்களுக்கு முன் தலா 1 மி.மீ. அளவே மழை பெய்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே மழை பெய்தது. காலையில் வானம் இருண்டு காணப்பட்டது. இதையடுத்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் தொடா்ந்து மழை பெய்து வந்தால் நீா்வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கூறினா்.