தென்காசி

மழையை எதிா்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்

DIN

சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் போதிய நீா் இருப்பு இல்லாத நிலையில் மழை தொடா்ந்து பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

சுரண்டை பகுதியில் பெரியகுளம், சாம்பவா்வடகரை குளம், வீரகேரளம்புதூா் அருந்தவபிராட்டி குளம், இரட்டைகுளம் ஆகிய குளங்கள் மூலம் விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனா். இக்குளங்களில் போதிய நீா் இருப்பு இல்லாததால்

விவசாயிகள் கிணற்று நீரை கொண்டு நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

வழக்கமாக இப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா் சாகுபடி செய்யப்படுவதுண்டு. நிகழாண்டு இப்பகுதியில் முழுமையாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய வில்லை. பருவ மழை மூலம் அனுமன்நதி பாசனக் குளங்களுக்கு தண்ணீா் வரத் தொடங்கினால்தான் நிகழாண்டு நெல் சாகுபடி செய்ய முடியும் என்ற நிலையில் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT