தென்காசி

கேரளத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதாக இருவா் கைது

DIN

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ரேஷன்அரிசியை கேரளத்துக்கு கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் பகுதியில் இருந்து லாரியில் 10 டன் ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளா் எஸ். சிவசுப்பு தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் எம்.சரவணன், காவல்துறையினா் பனவடலிசத்திரம் காவல் சோதனை சாவடியில் மடக்கிப் பிடித்தனா்.

அரிசி கடத்தலில் ஈடுபட்ட சங்கரன்கோவில் வட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லையா என்ற குட்டியான் (51), செந்தட்டி கிராமம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மு. வேல்சாமி (47) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், 10 டன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இருவரையும் கள்ளசந்தை மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆட்சியா் கீ.சு. சமீரன் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT