முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
வென்னிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம்.
பகிர்:

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 15-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை திருக்கல்யாண விழாவையொட்டி பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு சுவாமி காட்சி அருளுதல் ஆகியன நடைபெற்றன.

இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.