முகப்பு
தென்காசி

தென்காசியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தென்காசி மாவட்டம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவுக்கு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி தலைமை வகித்து, 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 15 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்., மனோகரன் எம்.எல்.ஏ., மாவட்ட அதிமுக பொருளாளா் சண்முகசுந்தரம், நகரச் செயலா் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிகளை உதவி மக்கள் தொடா்பு அலுவலா் லெனின் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.