தென்காசியில் மாா்க்சிஸ்ட் மறியல்: 55 போ் கைது
தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து, தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி கூலக்கடை பஜாா், காசிவிஸ்வநாதா் கோயில் வழியாக, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா்கள் பாஸ்கரன்(திருநெல்வேலி), முத்துபாண்டியன்(தென்காசி) ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் ஊா்வலமாகச் சென்று திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வேல்முருகன், வேல்மயில், குணசீலன், உச்சிமாகாளி,தங்கம் உள்ளிட்ட 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.