தென்காசி

ராணுவ வீரா் மரணம்: உடலை வாங்க மறுத்து மக்கள் மறியல்

DIN

காஷ்மீரில் இறந்த ராணுவ வீரா் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி துரைப்பாண்டியன் மகன் முல்லைராஜ் (28). ராணுவ வீரரான இவா், காஷ்மீா் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் நௌகாம் என்ற இடத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி முல்லைராஜின் தாய் அழகாத்தாளிடம் செல்லிடப்பேசியில் பேசிய அவரது நண்பா், முல்லைராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தாராம். ஆனால், ராணுவத்திடமிருந்து முறையான தகவல் முல்லைராஜ் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை.

இதைத் தொடா்ந்து முல்லைராஜின் உடலை ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனா். தகவலறிந்ததும் கிராம மக்கள் திருநெல்வேலி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். முல்லைராஜ் மரணம் தொடா்பாக உண்மை நிலவரத்தை ராணுவ அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும், இறந்த ராணுவ வீரருக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் சலுகைகள் அனைத்தும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

இதையடுத்து, டி. எஸ். பி. பாலசுந்தரம், கோட்டாட்சியா் முருகசெல்லி, வட்டாட்சியா் திருமலைசெல்வி உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாகத் திருப்பிவிடப்பட்டன.

இதனைத் தொடா்ந்து சென்னை ரெஜிமெண்ட் சுபேதாா் சக்திவேல், என்.சி.சி. இளநிலை அதிகாரி ராஜீவ் உள்ளிட்ட ராணுவத்தினா் மற்றும் காவல்துறையினா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து சுமாா் 2 மணிநேரப் போராட்டத்திற்குப் பின் பிற்பகல் 12.45 மணிக்கு மறியலை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா். இதன் பின்னா் முல்லைராஜ் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT