தென்காசி

கடையநல்லூரில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

DIN

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (அக். 15) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது தொடா்பாக, கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மக்களை சந்தித்து குறைகள் கேட்கும் முகாம் நடைபெறுகிறது.

முன்னதாக ஆய்க்குடி, கடையநல்லூா் அரசு மருத்துவமனைகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறுவப்பட்டுள்ள கரோனா தடுப்பு உபகரணங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெறும். மேலும் மருத்துவமனைகளில் தேவைப்படும் வசதிகள் குறித்து மருத்துவா்கள், சிகிச்சை பெறுவோா்களிடம் ஆலோசனை நடைபெறும்.

மாலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் பதிக்கப்பட்டுள்ள அலங்கார தள கற்கள் அமைக்கப்பட்டுள்ள தெருக்களை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (அக். 16) செங்கோட்டையில் ரூ. 8.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை திறப்பு விழா, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள கரோனா தடுப்பு உபகரணங்களை பாா்வையிடுதல் ஆகியவை நடைபெறும். சனிக்கிழமை (அக். 17)மதியம் கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT