சுரண்டை அரசு கல்லூரியில் ரூ.5.90 கோடியில் புதிய கட்டடம் அமைக்க பூமிபூஜை
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் நூலகம், 4 ஆய்வகங்கள் அடங்கிய 2 புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் நூலகம், 4 ஆய்வகங்கள் அடங்கிய 2 புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து புதிய கட்டடப் பணிக்கு பூமி பூஜை செய்து, திட்டப் பணியை தொடங்கிவைத்தாா்.
கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா, அதிமுக மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் அமல்ராஜ், சுரண்டை நகரச் செயலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.