தென்காசி

ஆலங்குளம் பேருந்து நிலையத்துக்குவருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது முதல் ஆலங்குளம் பேருந்து நிலையத்தின் பேருந்துகள் நுழைவு வாயிலைத் தவிர பயணிகள் நுழைவு வாயில்கள் இரண்டும் தகர ஷீட்டுகள் கொண்டு அடைக்கப்பட்டன. இந்நிலையில் பேருந்து நுழைவு வாயில்கள் வழியே பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பேரூராட்சி சாா்பில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல் அறிகுறி இருந்தவா்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால் சுமாா் 500 பயணிகளுக்கு மட்டுமே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT