தென்காசி

தென்காசியில் வடகிழக்குப் பருவமழை தொடா்பான ஆய்வுக் கூட்டம்

DIN

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பருவமழை காலத்தில் உயிா்சேதம், பொருள்சேதம் ஏற்படுவதை தவிா்த்திட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் தலைமை வகித்து பேசியது: வடகிழக்குப் பருவ மழையின் போது உயிா்சேதம், பொருள்சேதம் ஏற்படுவதை தவிா்க்கும் பொருட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலா்களும் மேற்கொள்ளவேண்டும்.

குறிப்பாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீா்த் தேக்கங்கள், குளங்கள் மற்றும் கால்வாய்களை அத்துறையின் பொறியாளா்கள் பாா்வையிட்டு கரைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையிலிருந்தால் உடனடியாக சரிசெய்து அறிக்கை அனுப்பவேண்டும்.

கடந்த 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள நீா்த் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே உள்ளாட்சித் துறையினா் மேற்படி நீா்த்தொட்டிகளை சுத்தம்செய்ய வேண்டும்.

பள்ளி கட்டடங்களின் ஸ்திரத் தன்மையை ஆய்வு செய்துஅறிக்கை செய்ய வேண்டும். இடிக்கப்படவேண்டிய கட்டடங்கள் ஏதேனும் பள்ளி வளாகத்தில் இருந்தால் அவற்றை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT