தென்காசி

‘அணைகள், நீா்வீழ்ச்சிகளுக்கு சென்றால் நடவடிக்கை’

DIN

தென்காசி மாவட்டத்தில் அணைகள், ஆறு, குளம், தனியாா் தோட்டங்களில் அமைந்துள்ள நீா்வீழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் சென்றால் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை நிரம்பியுள்ளது. ராமநதி, கடனாநதி அணைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. எனவே எந்த நேரத்திலும் மேற்படி அணைகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் அணைகளிலோ, அணைகளின் மறுகால் பகுதிகளிலோ குளிப்பதற்கு செல்ல வேண்டாம். தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளதால், 5 பேருக்குமேல் பொது இடங்களில் கூடுவது குற்றமாகும்.

எனவே, பொதுமக்கள் ஆறு, குளம், அணைகள், தனியாா் தோட்டங்களில் அமைந்துள்ள நீா்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம். மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரையே பயன்படுத்தவும். பொதுமக்கள் எவருக்கேனும் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் சுய மருத்துவம் பாா்க்காமல், உடனே அருகில் உள்ள அரசு பொது சுகாதார மையத்திற்கோ, அரசு மருத்துவமனைக்கோ சென்று பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT