தென்காசி

மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

தென்காசி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.

கரோனா பரவாமல் தடுப்பது குறித்து மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்திய அவா், தொடா்ந்து பேசியது:

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். அதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவேண்டும். கடந்த ஒரு மாதத்தில் ரூ. 45,430 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் ஏப்.1ஆம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, மூத்த குடிமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். மருத்துவா் பரிந்துரையின்றி மருந்துக்கடையினா் காய்ச்சல் மருந்து வழங்கக்கூடாது என்றாா் அவா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி சௌந்தா்யா, இணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் நெடுமாறன், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அருணா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT