தென்காசி

ஆலங்குளம் பெண் கொலை வழக்கு: கணவா் உள்பட 4 போ் கைது

DIN

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

முக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (28). அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான மல்லிகாவை (23). 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.

ஆலங்குளம் அண்ணாநகா் 1ஆவது தெருவில் தம்பதி வசித்து வந்தனா். ராஜகோபால், முத்துகிருஷ்ணபேரியில் உள்ள முடி திருத்தும் கடையில் வேலை செய்து வருகிறாா்.

மல்லிகா வீட்டு அருகே உள்ள கேபிள் டிவி அலுவலகத்தில் வேலைசெய்து வந்தாா்.

ராஜகோபாலுக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மல்லிகா இரு முறை புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை, மல்லிகா கேபிள் டிவி அலுவலகத்தில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த ராஜகோபால் அவரை கத்தியால் குத்தியுள்ளாா்.

அலறல் சப்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த சேகா் மனைவி மாரியம்மாள் (45) அங்கு வந்துள்ளாா். அவரையும் ராஜகோபால் குத்தியுள்ளாா்.

பலத்த காயமடைந்த மல்லிகா, மாரியம்மாள் ஆகியோருக்கு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மல்லிகா உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, ராஜகோபால், கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக ராஜகோபாலின், தந்தை முருகன் (51), தாயாா் முத்து செல்வம் (50), தங்கை புனிதா (26) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT