தென்காசி

சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலக இடமாற்றத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

சங்கரன்கோவிலில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் தென்காசிக்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, அனைத்துக் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில், கச்சேரி சாலையில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தின் கீழ் 46 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 52 சுகாதார நிலையங்கள் உள்ளன. மருத்துவா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா்.

சில மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தை தென்காசிக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இதற்கு திமுக, மதிமுக, மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், சமூக ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, அனைத்துக் கட்சி சாா்பில் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலா் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தாா்.

துணைச் செயலா் ராஜமாணிக்கம் வாணி முருகன், ரத்தினகுமாா், நயினாா் முகமது, சிபிஎம் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், பாலுசாமி, தமுமுக மாவட்ட துணைச் செயலா் திவான்மைதீன், திமுக சாா்பில் போ. சங்கா், பிரகாஷ், குமாா், எஸ்.எம். ராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT