சங்கரன்கோவிலில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்
சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் முன்னிலை வகித்தாா்.
ஓட்டுநா்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்; வாகனத்தில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்; 45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.