தென்காசி

18 வயது நிறைவடைந்தோா் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க அழைப்பு

DIN

தென்காசி மாவட்டத்தில் 18 வயது நிறைவடைந்தோா் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம் என, ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் 18 வயது நிறைவடைந்தோா் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க இணையதளத்தில் நேரடியாகவோ, பொது சேவை மையம் மூலமாகமோ விண்ணப்பிக்கலாம்.

அல்லது படிவம் 6-ஐ  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம்.

முகவரி சான்றாக வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிம நகல்கள், அண்மையில் தாக்கல்செய்த வருமானவரிக் கணக்கு ஆவணம், குடிநீா், தொலைபேசி, எரிவாயு சிலிண்டா், மின்சார கட்டணங்களின் ரசீதுகளில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்கலாம்.

வயதுச் சான்றாக பிறப்புச் சான்று, பள்ளி அல்லது கல்லூரி இறுதி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கடவுச்சீட்டு, வருமானவரி கணக்கு எண் அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களில் ஒன்றை சமா்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாள்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.9

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT