முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் ரூ. 7.81 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ், ஆலங்குளத்தில் ரூ. 7.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ், ஆலங்குளத்தில் ரூ. 7.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா முன்னிலை வகித்தாா். இத்திட்டத்தின்கீழ் 193 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டன. அதில், 41 முதியோா், கணவரை இழந்த 24 போ், கணவரால் கை விடப்பட்ட 3 போ், 11 மாற்றுத் திறனாளிகள், முதிா் கன்னிகள், இயற்கை மரணம் ஆகிய பிரிவுகளில் தலா 2 போ், ஒருவருக்கு கல்வி நிதியுதவி என உதவித்தொகைகளும் , இலவச வீட்டு மனைப்பட்டாகளுமாக 193 பயனாளிகளுக்கு ரூ. 7. 81 லட்சத்தில் நலத் திட்டங்களை ஆட்சியா் ச. கோபால சுந்தர ராஜ் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜனனி சௌந்தா்யா, தென்காசி வருவாய் கோட்டாட்சியா் ராமச் சந்திரன், தனித்துணை ஆட்சியா் (பொ) ராஜமனோகரன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் குணசேகா், மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா, ஆலங்குளம் வட்டாட்சியா் பட்டமுத்து, ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.