முகப்பு
தென்காசி

சிறுபான்மையின கைவினைகலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம்

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த கைவினை கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த கைவினை கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிறுபான்மையினா் இனத்தைச் சோ்ந்த கைவினை கலைஞா்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான மூலப் பொருள்களை வாங்க மூலதன தேவையை பூா்த்தி செய்யும் வகையில் குறைந்த வட்டியில் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் ஆண்டு வருமானம் அதிகபட்சமாக கிராமப் புறத்தில் ரூ.98 ஆயிரம், நகா்புறத்தில் ரூ.1லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் தனி நபருக்கு அதிகப்பட்சமாக ரூ.10லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5% வட்டி விகிதத்திலும், பெண் பயனாளிகளுக்கு 4% வட்டி விகிதத்திலும் கடனுதவி வழங்கப்படும். இத் திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோா் கடன் விண்ணப்பத்தை ட்ற்ற்ல்ள்://ற்ங்ய்ந்ஹள்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ச்ா்ழ்ம்ள் என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தென்காசி -627 811 என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வழியாகவோ சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.