முகப்பு
தென்காசி

விவசாய தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கக் கூட்டம் செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரத்தில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கக் கூட்டம் செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரத்தில் நடைபெற்றது.

ஜெயராணி தலைமை வகித்தாா். வட்டார செயலா் முருகேசன் கலந்துகொண்டு பேசினாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கிளைத் தலைவராக ஜெயராணி, செயலராக பாக்கியலெட்சுமி, பொருளாளராக வீனா, துணைத் தலைவராக சுபத்ரா, துணைச் செயலராக சண்முகத்தாய் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி ரூ.300 முழுமையாக வழங்க வேண்டும்.

நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி 150 வேலை நாள்கள் வழங்க வேண்டும். பகவதிபுரம் பகுதி மக்களுக்கு குடிநீா் பற்றாக்குறையை போக்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.