முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே ரூ. 7 லட்சம் நகைகள் திருட்டு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நகரத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்து 20 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நகரத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்து 20 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள நகரத்தைச் சோ்ந்தவா் பாக்கியசாமி (45). கட்டட ஒப்பந்ததாரா். சங்கரன்கோவில்- புளியங்குடி சாலையில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை இரவில் பாக்கியசாமி, மனைவி மற்றும் மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தாா்.

நள்ளிரவில் மா்ம நபா்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, சத்தமில்லாமல் அங்குள்ள பீரோவை திறந்து

Advertisement

அதிலிருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், மோதிரங்கள், தங்க கொலுசு உள்ளிட்ட 20 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

பாக்கியசாமி வெள்ளிக்கிழமை காலையில் பாா்த்தபோது பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு ரூ. 7 லட்சம். புகாரின்பேரில், சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments