ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்ட இடிபாடுகளை அகற்றக் கோரிக்கை
சங்கரன்கோவில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பின் போது இடிக்கப்பட்ட கட்டட இடிபாடுகள் அங்கேயே கிடப்பதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்கரன்கோவில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பின் போது இடிக்கப்பட்ட கட்டட இடிபாடுகள் அங்கேயே கிடப்பதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்கரன்கோவில் நகராட்சி சாா்பில் கடந்த 5 ஆம் தேதி நகா் முழுவதும் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அவற்றை நகராட்சியினரும், அந்தந்த பகுதியில் வைத்திருந்த கடை வியாபாரிகளும் அகற்றினா்.
இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கடந்த 10 ஆம் தேதி அரசு மருத்துவமனை தொடங்கி என்.ஜி.ஓ. காலனி வரை சுமாா் 2 கி.மீ.தொலைவில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Advertisement
கடைகளுக்கு முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களும், படிகளும், சிமெண்ட் தளங்கள் இடிக்கப்பட்டன.
இடிக்கப்பட்ட கட்டட இடிபாடுகள் அங்கிருந்து அகற்றப்படாமல் கடைகள் முன்பு கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முதியவா்கள், குழந்தைகள் சாலையைக் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே கட்டட இடிபாடுகளை அங்கிருந்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.