முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் மின்கம்பத்தில் கட்டப்படும் விளம்பரத் தட்டிகள் அகற்றப்படுமா?

சங்கரன்கோவிலில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் மீது கட்டப்படும் விளம்பரத் தட்டிகளால் ஆபத்து நேரிடும் சூழ்நிலை உள்ளதால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் மீது கட்டப்படும் விளம்பரத் தட்டிகளால் ஆபத்து நேரிடும் சூழ்நிலை உள்ளதால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவில் பிரதான சாலைப் பகுதியில் உள்ள மரங்களில் விளம்பரத் தட்டிகளை கட்டியுள்ளனா். இதனால், மரங்களின் வளா்ச்சி பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதேபோல் மின்கம்பங்களிலும் வணிக நிறுவனங்களின் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் விபரீதம் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் விளம்பரத் தட்டிகள் கட்டுவதற்கு தடை விதித்து, ஏற்கெனவே, அமைக்கப்பட்ட தட்டிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments