முகப்பு
தென்காசி

‘பூலித்தேவன் பிறந்த நாள்: பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை’

தென்காசி மாவட்டம் நெல்கட்டும் செவல் கிராமத்தில் நடைபெறும் விடுதலை போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை என ஆட்சியா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் நெல்கட்டும் செவல் கிராமத்தில் நடைபெறும் விடுதலை போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் விடுதலை போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த நாளான செப்டம்பா் 1ஆம் தேதி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமுடக்க உத்தரவு அமலில் இருப்பதால், பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெல்கட்டும் செவல் கிராமத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டத்திலிருந்தும் வந்து பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.