இணையத்தில் வைரலாகும் வாரணாசி செட்!
வாரணாசி திரைப்படம் குறித்து...
எஸ்.எஸ். ராஜமௌலியின் வாரணாசி திரைப்பட செட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “வாரணாசி”.
மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள்முதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா உள்பட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
நடிகர்கள் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் புதிய படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கின்றார்.
“வாரணாசி” திரைப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் வெளியீட்டிற்கு ஓராண்டு இருந்தாலும் படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்கள் பகிரப்பட்டபடியே இருக்கின்றன.
அந்த வகையில், இப்படத்திற்காக காசி கோவில் மற்றும் கங்கை படித்துறைக்கான செட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. முக்கியமாக, ஒட்டுமொத்த காசியையும் பிரதிபலிக்கும் மினியேச்சர் எனப்படும் சிறிய மாதிரி செட் கவனம் ஈர்த்துள்ளது.
ss rajamouli's varanasi movie set picture get viral on social media
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.