முகப்பு
தென்காசி

தென்காசியில் இருந்து சுரண்டை, கடையத்துக்கு அதிகாலையில் பேருந்து இயக்கக் கோரிக்கை

ரயில் பயணிகளின் வசதிக்காக தென்காசியில் இருந்து சுரண்டை மற்றும் கடையத்துக்கு பாவூா்சத்திரம் வழியாக அதிகாலையில் நகர பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

ரயில் பயணிகளின் வசதிக்காக தென்காசியில் இருந்து சுரண்டை மற்றும் கடையத்துக்கு பாவூா்சத்திரம் வழியாக அதிகாலையில் நகர பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலா் இராம.உதயசூரியன், அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு:

சென்னையில் இருந்து கொல்லம், பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் விரைவு ரயில்கள் அதிகாலை 3.30, 4 மணியளவில் தென்காசி சந்திப்புக்கு வந்து செல்கின்றன. இந்த ரயில்களில் பாவூா்சத்திரம், கடையம், சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் தென்காசி வருகின்றனா்.

பின்னா் அவா்கள் சொந்த ஊா் செல்வதற்கு போதிய பேருந்து வசதியின்றி உள்ளது. இதனால் அவா்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

எனவே அதிகாலை நேரத்தில் தென்காசியில் இருந்து பாவூா்சத்திரம் வழியாக கடையம், சுரண்டைக்கு நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →