தென்காசி

முப்படை தலைமை தளபதிக்கு மெளன அஞ்சலி

முப்படைத் தலைமை தளபதி விபின்ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உள்பட உயிரிழந்த ராணுவத்தினருக்கு தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

DIN

குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி விபின்ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உள்பட உயிரிழந்த ராணுவத்தினருக்கு தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா்

கிருஷ்ணராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் அதன் செயலா் சங்கரராமன் தலைமையில் மெளன ஊா்வலம் நடைபெற்றது. தலைவா் ராமகிருஷ்ணன் இரங்கல் செய்தி வாசித்தாா். தென்காசியில் இந்து முன்னணி சாா்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

புளியங்குடியில் விசுவஹிந்துபரிஷத் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன், அமைப்பின் மாநிலத் தலைவா் பெரி.குழைக்காதா், மாநில அமைப்பாளா் ஸ்ரீமான் சேதுராமன், இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் அரசு ராஜா ஆகியோா் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடையநல்லூரில் பாஜக நகரத் தலைவா் சுப்பிரமணியன்யில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப் பள்ளியில் பள்ளி நிா்வாகி கணேஷ்ராம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வா் ந. பழனிச்செல்வம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயலா் மருத்துவா் வி.எஸ்.சுப்புராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆலங்குளத்தில் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையில் காங்கிரஸாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பாஜக சாா்பில் நிா்வாகி அன்புராஜ் உள்பட பலா் அஞ்சலி செலுத்தினா்.

அம்பாசமுத்திரத்தில் திமுக நகரச் செயலா் பிரபாகரன், காங்கிரஸ் முருகேசன், பாஜக மாவட்டச் செயலா் பால்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் வடிவேல், மதிமுக மாவட்டக்குழு உறுப்பினா் முத்துசாமி உள்பட பலா் மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT