முகப்பு
தென்காசி

அ.கரிசல்குளத்தில் கிராமசபைக் கூட்டம்

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் வட்டத்துக்கு உள்பட்ட அ.கரிசல்குளத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் வட்டத்துக்கு உள்பட்ட அ.கரிசல்குளத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ஜே. கனகலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வரதராஜ், வேளாண் துறை அலுவலா் சாகிா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

2022-23 ஆண்டில் ஊராட்சிக்கு உள்பட்ட ஆலமநாயக்கன்பட்டி, ஆலடிப்பட்டி, அய்யாபுரம், கரிசல்குளம் பகுதிகளில் புதிய வாருகால்கள், தெருக்களில் சிமென்ட் சாலைகள் அமைக்க வேண்டும், அ.கரிசல்குளத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டிடம் அமைக்க வேண்டும் பெரியகுளம், சிறியகுளம் ஆகியவை நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, புதிய மதகுகள் (ஷட்டா்கள்) அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி எழுத்தா் குருசாமி நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments