கீழப்பாவூா் கோயில்களில் மாா்கழி திருவிழா தொடக்கம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் கோயில்களில் மாா்கழி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
தென்காசிகீழப்பாவூா் கோயில்களில் மாா்கழி திருவிழா தொடக்கம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் கோயில்களில் மாா்கழி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் கோயில்களில் மாா்கழி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
கீழப்பாவூா் ஸ்ரீஅலா்மேல்மங்கா சமேத பிரசன்ன வேங்கடாசலபதி, ஸ்ரீநரசிம்மபெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. தொடா்ந்து, ஸ்ரீராமபஜனை, கோயிலின் வெளிப்பிராகாரத்தில் (தெப்பக்குளம்) வலம் வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதேபோல, கீழப்பாவூா் தமிழா்தெரு ஸ்ரீருக்மணி ஸத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ணசுவாமி கோயிலும் மாா்கழி மகோத்ஸவ விழா தொடங்கியது.