முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் பஜனைக் குழு 67ஆம் ஆண்டு விழா

சங்கரன்கோவிலில் தனுா் மாத தேவார பஜனைக் குழுவின் 67ஆவது தொடக்க விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் தனுா் மாத தேவார பஜனைக் குழுவின் 67ஆவது தொடக்க விழா நடைபெற்றது.

தனுா் மாத பஜனைக் குழுவினா் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் சங்கரநாராயண சுவாமி கோயில் முன்பு தொடங்கி வீதியில் பஜனை செய்வது வழக்கம். நிகழாண்டு கடந்த 11ஆம் தேதி தொடங்கிய பஜனை, ஜன. 14 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்த பஜனைக் குழுவை ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளா் எம். சிவஞானம் தொடக்கிவைத்தாா். சைவ சித்தாந்த சபைச் செயலா் ஆ. சண்முகவேலுஆவுடையப்பன், புரவலா்கள் எம். சங்கரன், இ. சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

கோயில் துணை ஆணையா் எஸ். கணேசன் வாழ்த்திப் பேசினாா். தொடா்ந்து, அரசு இசைப் பள்ளி ஆசிரியா் எஸ். சுப்பிரமணிய ஓதுவாா், எம். பாா்வதிநாத ஓதுவாா், இ. ராமகிருஷ்ணன் ஆகியோரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சைவ சித்தாந்த சபைத் தலைவா் என்.கே.எஸ்.டி. சுப்பிரமணியன் வரவேற்றாா். ஏற்பாடுகளை தனுா் மாத பஜனைக் குழுவினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments