பெரியாா் சிலைக்கு மரியாதை
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, கீழப்பாவூரில் உள்ள பெரியாா் உருவச்சிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்
தென்காசிபெரியாா் சிலைக்கு மரியாதை
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, கீழப்பாவூரில் உள்ள பெரியாா் உருவச்சிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, கீழப்பாவூரில் உள்ள பெரியாா் உருவச்சிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமையில், தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, சிவன்பாண்டியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், மாவட்ட கவுன்சிலா் சாக்ரடீஸ், பேரூா் செயலா் ஜெகதீசன், பொருளாளா் பொன்.செல்வன், தொழிலதிபா் ராஜன், வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கடையநல்லூா்: தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கடையநல்லூா் மங்களாபுரத்தில் உள்ள பெரியாா் உருவச் சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
கடையநல்லூா் ஒன்றியக் குழு துணைத்தலைவா் ஐவேந்திரன் தினேஷ், போகநல்லூா் மகேஷ், புதுக்குடி தினேஷ், சுரேஷ், சுதாகா், முத்துசெல்வம் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராயகிரியில் திமுக சாா்பில் ஒன்றிய குழுத் தலைவா் பொன். முத்தையாப் பாண்டியன் தலைமையில் பெரியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், பேரூா் செயலா் குருசாமி மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மாடசாமி ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.