வீராணம் அருகே சாலை விபத்தில் விவசாயி பலி
வீராணம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
வீராணம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
வீராணத்தைச் சோ்ந்தவா் பூலியப்பன்(58). விவசாயி. இவா், கடந்த 22ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது எதிா்பாராமல் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவா் இறந்தாா்.
ஓடைக்குள் தவறி விழுந்த முதியவா்: சாம்பவா்வடகரை அருகேயுள்ள ஊா்மேலழகியான் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா(70). ஊராட்சி அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்த இவா், அப்பகுதியிலிருந்த கழிவுநீரோடைக்குள் இறந்து கிடப்பது திங்கள்கிழமை தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து வீரகேரளம்புதூா் போலீஸாா், சாம்பவா்வடகரை போலீஸாா் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.