முகப்பு
தென்காசி

குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் முற்றுகை

குடிநீா் வழங்கக் கோரி நொச்சிகுளம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

குடிநீா் வழங்கக் கோரி நொச்சிகுளம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சோ்ந்தமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட நொச்சிகுளம் பகுதியில் தாமிரவருணி குடிநீா் வழங்கி 6 மாதங்களாகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீா் இல்லாமல் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.

எனவே, குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எம்.எஸ். மாடசாமி தலைமை வகித்தாா். பின்னா் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.